Friday, 16 October 2015
“For Change” செயலி மீண்டும் ஆண்ட்ராய்டு
அன்புள்ள நண்பர்கள் மற்றும் நலம் விரும்பும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த மாதம் துவக்கிய “For Change” கைபேசி செயலிக்குத் தாங்கள் அளித்த அபரிமிதமான
ஆதரவிற்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி. இந்த “For Change” செயலி மீண்டும் ஆண்ட்ராய்டு
கைபேசியில் தரம் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி தானாகவே பதிவேற்றம்
ஆகும். இல்லையேல் மறுபடியும் தாங்களே முதலில் பதிவிறக்கம் செய்ததை நீக்கிப் பின்னர்
புதிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்தப் பிரத்தியோகமான “For Change” செயலி மூலமாக மக்களோடு மீண்டும் இணைப்பை
ஏற்படுத்திக்கொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தமிழ்நாட்டை உலகிலேயே
முன்மாதிரி மாநிலமாக மாற்றும் நம் பயணத்தில் உங்கள் அனைவரோடும் இணைந்து
இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. நன்றியுடன் - அன்புமணி இராமதாஸ்
Wednesday, 16 September 2015
மின்கட்டணம் குறைக்கப்படும் வீட்டின் கூறைகளில் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஊக்குவிக்கப்படும்.,
மின்கட்டணம் குறைக்கப்படும் வீட்டின் கூறைகளில் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
பதினைந்து மின்சாரத்துறை:
*தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு புத்துயிரூட்ட வல்லுனர் குழு அமைக்கப்படும். அதன் பரிந்துரைகள் 3 மாதங்களில் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.*மின்துறை சீர்திருத்தங்களின் மூலம் மின்வாரியம் லாபம் ஈட்டும் நிலை ஏற்படுத்தப்படும்.
*தமிழகம் உண்மையாகவே மின்மிகை மாநிலமாகும் வகையில் புதிய மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
*மின்கட்டணம் குறைக்கப்படும்.
*வீட்டின் கூறைகளில் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஊக்குவிக்கப்படும். அவ்வாறு
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அரசே எடுத்துக் கொண்டு அதற்கான விலையை
வழங்கும்.
*மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார சட்டத்தின் அம்சங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படும்.ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் இலவசம்
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் இலவசம்
பதினான்கு குடும்பத்துக்கு இலட்சம் ருபாய்
*அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மிச்சமாகும். இதை அக்குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவசமாக கருதலாம்.*தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1.08 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.
கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மெட்ரோ சேவை அறிமுகம்
கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்படும்.
பதிமூன்று போக்குவரத்து
*ஆம்னி பேரூந்துகளின் கட்டணம் முறைப்படுத்தப்படும்.
*ஆம்னி பேரூந்துகளுக்கு போட்டியாக அனைத்து வசதிகளுடன் கூடிய அரசுப் போக்குவரத்துக்கழக பேரூந்துகள் இயக்கப்படும்.
*அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் ஒழிக்கப்பட்டு, அனைத்துப்
போக்குவரத்துக் கழகங்களும் லாபத்தில் இயக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படும்.
*அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2000 கோடி நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும்.
*சென்னையில் மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும். கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்படும்.
*தமிழகத்தில் ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க வசதியாக திட்டச் செலவில் 50 விழுக்காட்டை மாநில அரசு வழங்கும்.
Labels:
கோவை,
சேலம்,
திருச்சி,
திருநெல்வேலி மெட்ரோ சேவை அறிமுகம்,
மதுரை
Location:
Kumbakonam, Tamil Nadu, India
குடிசைகள் இல்லைதா தமிழகம்
குடிசைகள் இல்லைதா தமிழகம்
பன்னிரெண்டு குடிசைகளுக்கு மாற்று
*குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்குடன் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்படும். அவர்களுக்கு அடுத்த இரு ஆண்டுகளில் கழிப்பறை, சூரிய ஒளி மின்சார வசதியுடன் கூடிய வீடுகள் கட்டித்தரப்படும்.
*சென்னை போன்ற நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரவில் தங்குவதற்கான வீடுகள் கட்டித் தரப்படும்.
Labels:
குடிசைகள் இல்லைதா தமிழகம்
Location:
Kumbakonam, Tamil Nadu, India
உட்கட்டமைப்பு வசதிகள் சர்வதேசயளவில் உயர்த்தப்படும்
உட்கட்டமைப்பு வசதிகள் சர்வதேசயளவில் உயர்த்தப்படும்
பதினொன்று உட்கட்டமைப்பு வசதிகள்:
*அனைத்து மாவட்ட சாலைகளும் இருவழிப் பாதைகளாக்கப்படும்; அனைத்து மாநில நெடுஞ்சாலைகளும் நான்குவழி பாதைகளாக மாற்றப்படும்.*அனைத்து மாவட்டத் தலைநகரங்களும் சென்னையுடன் தேசிய நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
*சென்னை & கன்னியாகுமரி இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை ஆறுவழிப் பாதையாக மாற்றப்படும்.
*சாலைகளை அமைப்பவர்களே அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவற்றை பராமரிக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக சேர்க்கப்படும்.
*குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்; வேலூருக்கு விமான சேவை தொடங்கப்படும்.
*கட்டமைப்பு தேவைகளை முன்கூட்டியே கணக்கிட்டு நிறைவேற்ற வசதியாக தமிழ்நாடு கட்டமைப்பு ஆணையம் அமைக்கப்படும்.
பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவோம்
பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவோம்
பத்தாவது பொருளாதார வளர்ச்சி
*பொருளாதார விஷயங்களில் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார வல்லுனர் குழு அமைக்கப்படும்.
*தமிழகத்தின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
*விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது வினியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். உணவு சமைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களும் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும்.
*தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் நியாய விலை பல்பொருள் அங்காடிகள் திறக்கப்படும். இவற்றில் அனைத்துப் பொருட்களும் அடக்க விலைக்கே விற்பனை செய்யப்படும்.
*சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறிய அளவில் நடத்தப்பட்டு வரும் பண்ணைப் பசுமைக் கடைகள் தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்படும்.
*பண்ணைப் பசுமைக் கடைகளுக்காக மாவட்ட அளவில் அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். இதனால் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.
*மின் உற்பத்தியை அதிகரித்து, மின்சாரக் கொள்முதலை முற்றிலுமாக கைவிடுவதன் முலம், மின் கட்டணம் குறைக்கப்படும்.
*அரசுப் பேரூந்துகளில் பயணிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் சரக்குகளை ஏற்றிச் செல்வதன் மூலம் ஒவ்வொரு பேரூந்துக்குமான சராசரி தினசரி வருவாய் ரூ.20,000 ஆக உயர்த்தப்படும். இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு கிடைக்கும் லாபத்தை பயணிகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் பேரூந்துக் கட்டணம் குறைக்கப்படும்.
*சர்க்கரை மீதான 5% மதிப்பு கூட்டு வரி ரத்து செய்யப்படும்.
*நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படும்.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் இலவசம்
*அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மிச்சமாகும். இதை அக்குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவசமாக கருதலாம்.
*தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1.08 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.
*இந்த நடவடிக்கைகளின் மூலம் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படுவதால் இனி அதிகமாக கடன் வாங்கத் தேவையிருக்காது.
வேலைவாய்ப்பே முதல் குறிக்கோள்
வேலைவாய்ப்பே முதல் குறிக்கோள்
ஒன்பவாது வேலைவாய்ப்பு
*5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.*2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
*சுய தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்படும். முறைசாரா தொழில் தொடங்குவதற்காக அரசே உத்தரவாதம் அளித்து கடன் பெற்றுத் தரும்.
*இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
அபரிவிதமான தொழில் வளர்ச்சி
அபரிவிதமான தொழில் வளர்ச்சி
எட்டாவது தொழில் வளர்ச்சி
*தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார்.
*புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி 3 வாரங்களில் வழங்கப்படும்.
*ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தொழில் திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவ முதலமைச்சர் அலுவலகத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
*தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தியில் 60% சென்னையிலும், 15% கோவையிலும் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் 25% மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நிலையை மாற்ற தமிழகம் முழுவதும், குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.
*தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை தொடங்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
*தொழிற்சாலைகளில் பணியாற்ற சிறந்த மனித வளத்தை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழிற்கல்வி நிலையமும், ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் அமைக்கப்படும்.
*ஓசூரில் தொடங்கி கிருஷ்ணகிரி, தருமபுரி வரையுள்ள பகுதி தகவல் தொழில்நுட்பத் தாழ்வாரமாக மாற்றப்படும்.
*புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு உடனடியாக நிலம் வழங்க வசதியாக ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். இதில் ஒரு சதுர அடி கூட விளைநிலமாக இருக்காது.
Labels:
அபரிவிதமான தொழில் வளர்ச்சி
Location:
Kumbakonam, Tamil Nadu, India
தேனீக்கள் போல செயல்படும் அரசு நிர்வாகம்
தேனீக்கள் போல செயல்படும் அரசு நிர்வாகம்
ஏழாவது நிர்வாகம்
*முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாததின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.*ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.
*அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத் தலைநகரில்
நடத்தப்படும். அதேபோல், மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒவ்வொரு
மாதமும் ஒரு மாவட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையிலான குழு சென்று ஆய்வு
நடத்தும்.
*அரசின் முடிவுகள் பெரும்பாலும் கருத்தொற்றுமை அடிப்படையில் எடுக்கப்படும். சட்டமுன்வரைவுகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் மாற்றத்துடன் நிறைவேற்றப்படும்.
*மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க முதலமைச்சர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர்
அலுவலகங்களிலும் இலவச தொலைபேசி சேவை தொடங்கப்படும்.
*ஆண்டுக்கு நான்குமுறை சட்டப்பேரவை கூடுவதும், 100 நாட்கள் பேரவைக் கூட்டம் நடப்பதும் உறுதி செய்யப்படும்.
*காவல்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்ய நேர்மையான அதிகாரிகளைக்
கொண்ட சுதந்திரமான காவல் ஆணையம் அமைக்கப்படும்.
*அனைத்து காவல் நிலையங்களிலும் படப்பதிவுக் கருவிகள் பொருத்தப்படும்.
*உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ஊழல் சமூகத்தின் புற்றுநோய்க்கு சமம்
ஊழல் சமூகத்தின் புற்றுநோய்க்கு சமம்
ஆறாவது ஊழல் ஒழிப்பு
*ஊழலை ஒழிப்பதற்காக, புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே லோக் அயுக்தா சட்டம் கொண்டுவரப்படும்.
*முதலமைச்சரும், அமைச்சர்களும் லோக் அயுக்தா அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள்.
*பொதுச்சேவை பெரும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.
*தகவல் ஆணையம் 10 உறுப்பினர்கள் மற்றும் தலைவரைக் கொண்ட வெளிப்படையான அமைப்பாக மாற்றப்படும்.
*மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களும், துறைகள் அளவில் செயலாளர்களும் ஊழல் ஒழிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அவர்களின் அதிகாரவரம்புக்குட்பட்ட அலுவலகங்களில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் மட்டுமின்றி, அதைத் தடுக்கத் தவறிய பொறுப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
*அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொறுத்தப்படும்.
*ஊழல் குறித்து புகார் தெரிவிக்க 3 இலக்க இலவச தொலைபேசி சேவை வழங்கப்படும்.
எதிர்கால தலைமுறையை காத்திட மதுஒழிப்பே தீர்வு
எதிர்கால தலைமுறையை காத்திட மதுஒழிப்பே தீர்வு..
ஐந்தாவது மதுஒழிப்பு
*தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். பா.ம.க. ஆட்சி அமைந்தபின் முதலமைச்சர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் ஆணையில் தான்.*மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுதல், கள்ளச்சாரயத்தைத் தடுத்தல், குடிநோயர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
*கள்ளச்சாராயம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்..
நீர்பாசனம் உடலில் ஓடும் இரத்தநாளங்களுக்கு சமம்..
நீர்பாசனம் உடலில் ஓடும் இரத்தநாளங்களுக்கு சமம்..
நான்கவது நீர்பாசனம்
*நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம்... தனி அமைச்சர்*தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.
*அவினாசி&அத்திக்கடவு, பாண்டியாறு & புன்னம்புழா, மேட்டூர் உபரி நீர் பாசனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
*பாசன வசதி பெற்ற நிலங்களின் அளவு 48 லட்சம் ஹெக்டேரிலிருந்து 1 கோடி ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.
*ஆறுகள் மற்றும் கால்வாய்களில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டப்படும்.
*தமிழகத்தில் பாயும் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளை கதாநாயகர்கள்
விவசாயிகளை உண்மையான கதாநாயகர்கள்
மூன்றாவது வேளாண்மை;*வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். உழவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் இதில் சேர்க்கப்படும்.
*வேளாண்மைக்கு தேவையான உரம், பூச்சிமருந்து, விதைகள் உள்ளிட்டவையும், மின்சார மோட்டாரும் இலவசமாக வழங்கப்படும்.
*உழவர்களின் பயன்பாட்டுக்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஓர் டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்.
*கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,000 ஆகவும், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,200 ஆகவும் உயர்த்தப்படும்.
*உழவர்களின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; உழவர் ஊதியக்குழு அமைக்கப்படும்.
*வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
*தமிழகத்தில் 4 மண்டல வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கும் இஸ்ரேலிய வேளாண்துறைக்கும் இடையே ஒத்துழைப்பு உடன்பாடு செய்யப்படும்.
*மரபு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அனுமதிக்கப்படாது.
Labels:
விவசாயிகளை கதாநயகர்கள்
Location:
Kumbakonam, Tamil Nadu, India
இலவச மருத்துவம் வழங்கப்படும்
இலவச மருத்துவம் வழங்கப்படும்
மருத்துவம்
*தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். இதனால் மருத்துவத்திற்காக மக்கள் ஒருபைசா கூட செலவழிக்க தேவையிருக்காது.
*இலவச மருத்துவம் வழங்குவதற்கு வசதியாக தமிழ்நாடு சுகாதார இயக்கம் என்ற புதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
*புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கான அதிகவிலை கொண்ட மருந்துகளை வாங்குவதற்கு உதவ தனி நிதியம்.
*மருந்து விலையை கட்டுப்படுத்த மருந்துகள் ஊக்குவிக்கப்படும்.
*ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து வசதிகளைக் கொண்ட அதிஉயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
*கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால உதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
*மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதியோர் பிரிவு ஏற்படுத்தப்படும்.
*பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை தினமும் ஒரு லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.
கட்டாய கட்டணமில்லா தரமான கல்வி
பாமக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2016 வரைவுத் தேர்தல் அறிக்கையில் முதாலவது "கல்வி"
*கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆக அதிகரிக்கப்படும். அதாவது கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும்.*மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும்.
*மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு
பள்ளித் தர இயக்குனர் நியமிக்கப்படுவார்.
*மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஆந்திரம் மாநிலப் பாடத்திட்டங்களில் உள்ள சிறந்த அம்சங்களை கண்டறிந்து அவற்றை உள்ளடக்கிய புதியக் கல்வித் திட்டம் உருவாக்கப்படும். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்படும். புதியக் கல்வித் திட்டம் 2017 ஆம் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
*தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9&ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
*- அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் கணிணி ஆசிரியர்களும், பிற சிறப்பு ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.
*தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வகை செய்யப்படும்.
*திறன் சார் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாக சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.
*பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மை குழுக்களாக மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும்.
*தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உயர்கல்வி;
*பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் திறன்சார் கல்வி கல்லூரிகளுக்கும், பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும். கல்லூரிப் படிப்பு முடிக்கும் போது வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
*ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பல்கலைக் கழகம் தொடங்கப்படும்.
*தமிழகத்தில் 6 ஒருமை பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். ஆராய்ச்சிகளை செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.
*அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு சட்டக்கல்லூரியும் தொடங்கப்படும்.
*தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழிட்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
*பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும். அவற்றில் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவர்.
Tuesday, 15 September 2015
தற்பெருமை பேசிகிறது தமிழக அரசு- மருத்துவர்.அய்யா
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு
அத்தியாவசியப் பொருட்களின் விலையைகட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது
-----அறிக்கை
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், தமிழக அரசோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தற்பெருமை பேசி கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
Monday, 14 September 2015
நேரடியாக எளிய மக்களும் பங்கு பெறலாம்
நேரடியாக எளிய மக்களும் பங்கு பெறலாம்
செப்டம்பர் 14.09.2015,
மக்கள் காவலர் தமிழின போராளி பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை;
"வளர்ச்சிக்கான செயல்திட்டம்: பா.ம.க வரைவு தேர்தல் அறிக்கை 16-ஆம் தேதி வெளியீடு!"
கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையும் இணைந்து அண்மையில் சென்னையில் நடத்திய ‘ஜனநாயகத்துடன் கூடிய வளர்ச்சி’ என்ற தலைப்பிலான கருத்தங்கில் அறிவுப்பூர்வமாகவும், மக்கள் மீதான அக்கறையுடனும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அறிவார்ந்த, ஜனநாயக நலன் சார்ந்த முன்முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரியுமான எம்.ஜி. தேவசகாயம் உள்ளிட்ட சான்றோர் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
அதில் முதன்மையானது அரசியல் கட்சிகள் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான செயல் திட்டத்தை தேர்தல் அறிக்கையாக மக்களிடம் முன் வைக்க வைக்க வேண்டும்; அப்போது தான் அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுக்க மக்களுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் என்பதாகும். ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் முன் வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையை பா.ம.க முழுமையாக ஏற்கிறது.
தமிழ்நாட்டில் அறிவார்ந்த அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்;மக்களின் யோசனைகள் தான் அரசின் திட்டங்களாக உருப்பெற வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். அதனால் தான் கடந்த காலங்களில் மக்களின் விருப்பத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திட்டங்களை எதிர்த்து கடுமையான போராட்டங்களை பா.ம.க. நடத்தியிருக்கிறது.
அந்த வகையில், வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தை மக்கள் ஆராய்வதற்கு அவகாசம் வழங்கும் வகையிலும், மக்களின் மேலான ஆலோசனைகளை பெறும் வகையிலும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் 16&ஆம் தேதி வெளியிடப்படும்.
தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும். தமிழகத்தின் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்திருப்பவை கல்வி, சுகாதாரம், விவசாயம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள் தான். தொழில் வளர்ச்சி என்பது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி தமிழகத்திற்கு பெரும் முதலீடு வந்துவிட்டதாக நாடகங்கள் நடத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வந்த நோக்கியா, ஃபாக்ஸ்கான் போன்ற பெரு நிறுவனங்களும், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்களும் ஆந்திரம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் தமிழகத்தில் போதிய அளவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாதது தான். தமிழகத்தில் 86 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர்.
மின் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு, பொதுப்போக்குவரத்துக் குறைபாடுகள், குடிநீர் தட்டுப்பாடு, நகரமயமாக்கல், ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதியின்மை என தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கெல்லாம் மேலாக சமூகத்தை அழித்து வரும் மது அரக்கனை ஒழிக்க வேண்டிய பெரும் கடமையும் ஆட்சியாளர்களுக்கு உள்ளது.
இவை அனைத்துக்கும் எத்தகைய தீர்வுகளை ஒரு கட்சி முன்வைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அக்கட்சியின் நிர்வாகத் திறனையும், மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையையும் உணர முடியும். பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது என்பதையும், நிர்வாகத் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் அதன் வரைவு நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரைவு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு பொதுமக்களிடமும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களிடமும் கருத்துக்கள் கோரப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளும் சேர்க்கப்பட்டு நிறைவு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். அது அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நலப்பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி செய்து கொள்ளும் சமூக ஒப்பந்தமாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மருத்துவர் அய்யா அவர்கள் தமது இன்றைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாழ்க அய்யா வளர்க பாட்டாளி மக்கள் கட்சி. ...
மாற்றம் முன்னேற்றத்தின் விதை, எதிர்காலத்தின் நம்பிக்கை!!!
மாற்றம் நமது செயலால் வரும், நமது அன்பால் வரும்!!!"மாற்றம் முன்னேற்றம் அன்புமணி "
#Anbumani4cm

Friday, 29 May 2015
ஆனந்த விகடன்-க்கு மருத்துவர்.அய்யா அளித்த வெள்ளந்தி நேர்காணல்......
ஆனந்த விகடன்-க்கு மருத்துவர்.அய்யா அளித்த வெள்ளந்தி நேர்காணல்......
விகடன் : பாமக தலைமையை ஏற்றுகொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி என்கீறீர்கள். உங்கள் தலைமையை ஏற்றுகொள்ள எந்த கட்சி முன் வந்துள்ளது...?
மருத்துவர்.அய்யா : சில கட்சிகளிடம் இருந்து சமிங்கைகள் வந்துருகின்றன , ஆனால் அவை எந்த காட்சிகள் என்று தற்போது சொல்ல இயலாது ,
தமிழகத்தில் மிக பெரிய அரசியல் வெற்றிடம் உள்ளது . 50 ஆண்டு கால கழகங்களின் ஆட்சில் தமிழகம் சீரழிந்துவிட்டது என்ற சிந்தனை அனைத்து மட்டங்களிலும் பரவி , அரசியல் ரீதியாக மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள், அந்த மாற்று, நாங்கள்தான் அறிவித்து இருக்கிறோம் , இந்த ஆண்டு இறுதியில் ஊழலை எதிர்ப்பவர்கள் எங்கள் தலைமையில் வருவார்கள் ...

தேமுதிக, திமுக இரண்டுமே மக்களால் புறக்கண்ணிக்கப்பட்ட கட்சிகள்..!!!
விகடன் : திமுக-வும், தேமுதிக-வும் சட்டமன்ற தேர்தல் அரங்கில் நெருங்கி வருவதுபோல தெரிகிறது, அப்படி ஒரு கூட்டணிஅமைந்தால், வட மாவட்டங்களில் பாமக அதை எப்படி எதிர்கொள்ளும் ..?
மருத்துவர்.அய்யா : தேமுதிக, திமுக இரண்டுமே மக்களால் புரகண்ணிக்கப்பட்ட கட்சிகள், பாரம்பாரிய மிக்க திமுக-வால்ஒரு நாடாளமன்ற தொகுதியை கூட வெல்ல முடிய வில்லை , அனால் நாங்கள் எங்கள் சொந்த பலத்தில் வென்று இருக்கிறோம் .
நாங்கள்தான் இங்கே மக்களுக்கு மாற்று, நாங்களே வெல்வோம்...!!!!!
நாங்கள்தான் இங்கே மக்களுக்கு மாற்று, நாங்களே வெல்வோம்...!!!!!
கண்ணியமான வளர்ச்சி அரசியலை முன்வைக்கிறோம்
விகடன் : பாமக அனைத்து தரப்பினரோடும் மோதல் போக்கை கடைபிடிப்பதால், அரசியல் அரங்கில் நீங்கள் தனித்துவிடப்படும் அறிகுறி தென்படுகிறதே...?
மருத்துவர்.அய்யா : "நாங்கள் தனித்துவத்வோடு அரசியல் செய்கிறோம், கண்ணியமான வளர்ச்சி அரசியலை முன்வைக்கிறோம், நாங்கள் தனித்துவிட படுகிறோம் என்றே பேச்சுக்கே இடம் இல்லை , எங்களை தனிமைப்படுத்த நினைப்பவர்கள் எங்களை போல தனித்து போட்டியிடட்டும். அப்போது தெரியும்
யார்..? மக்களோடு இருக்கிறார்கள் என்று .."
யார்..? மக்களோடு இருக்கிறார்கள் என்று .."
"அதிமுக, திமுக இரண்டுமே பொது எதிரிகள்தான் "
விகடன் : "கூட்டணி அரசியலையே விரும்புகிறது திமுக உங்களின் பொது எதிரியான ஜெயலலிதாவை விழ்த்த, நீங்கள் ஏன் திமுக-வோடு கூட்டணி சேரக்கூடாது..?"
மருத்துவர்:அய்யா : "அதிமுக, திமுக இரண்டுமே பொது எதிரிகள்தான் ,கடந்த பல ஆண்டுகளாக இதை நான் சொல்லி வருகிறேன். அதிமுக, திமுக இரு கட்சிகளையும் அப்புறபடுத்த வேண்டும் என்றுதான் அன்புமணி இராமதாஸ்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறோம், எங்கள் நிலைப்பாடு அப்படி இருக்க, நாங்கள் எப்படி அவர்களுடன் கூட்டணி சேர முடியும் ..?"
"ஜெயலலிதாவே வென்றதாக அறிவித்துவிட்டு போகலாம்"
விகடன் : "ஜெயலலிதா போட்டியிட இருக்கும் இடைதேர்தலில், பாமக ஏன் ஒரு வேட்பாளரை நிறுத்த கூடாது ..?
மருத்துவர்.அய்யா: "இடைதேர்தல் வேண்டாம் என்பதே தான் என் நிலைபாடு", ஏனென்றால், ஏற்கெனவே இரு பார்முலாக்கள் உள்ளன , திமுகவுக்கு திருமங்கலம், அதிமுகவுக்கு திருவரங்கம்.5000 தொடங்கி 6000 வரை இந்த தேர்தலில் ஓட்டுக்கு விலை நிர்ணயித்தனர், ஜெயலலிதா போட்டியிடும் தொகுதில் 7000 முதல் 8000 ருபாய் வரை வாக்குகளுக்கு கூடுதலாக விலை நிர்ணயிப்பார்கள், ஆகவே எந்த கட்சிகளும் இடைதேர்தலில் போட்டியிட வேண்டியது இல்லை, ஜெயலலிதாவே வென்றதாக அறிவித்துவிட்டு போகலாம்....
"அரசியல் பருவநிலைக்கு ஏற்ப பாஜக தன் நிலையை மாற்றிகொள்கிறது"
விகடன் : " சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாக்கு , மோடி வாழ்த்து சொல்கிறார்; தமிழக பாஜகவினர் பதவியேற்ப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள், வரவிற்கும் சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதாக்கு எதிராக வேட்ப்பாளரை நிறுத்த போவதாக தமிழக பாஜக சொல்கிறது ..!!! இது நாகரிக அரசியலா..? நாடகமா ?"
மருத்துவர்.அய்யா : "இதை எப்படி ஆரோக்கியமான அரசியல் என்று சொல்ல முடியும் ...? அரசியல் பருவநிலைக்கு ஏற்ப பாஜக தன் நிலையை மாற்றிகொள்கிறது, இவ்வளவு பெரிய வழக்கில் ஜெயலலிதா விடுதலையானது ஒரு பக்கம் இருக்கட்டும்,
கடந்த நான்கு ஆண்டு அதிமுக அரசியின் ஊழல்கள் சொல்லி மாளாது, நாங்கள் ஆளுநரிடம் 216 பக்க அறிக்கை கொடுத்தோம், பொதுப்பணிதுறை அதிகாரிகளின் ஊழல் பட்டியலை சிலர் வெளியிடுகிறார்கள், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என ஊழலில் ஊறி திளைக்கும் அதிமுக அரசை, பாஜக பாராட்டுவது அரசியல் நாகரிகம் அல்ல.அதுபோல நீதிபதி.குன்ஹாவின் தீர்ப்பில் குற்றவாளியாகி, சிறைக்கு சென்ற ஜெயலலிதா , ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவை, மத்திய அமைச்சர். அருண் ஜெட்லி சந்திக்கிறார், இந்த சந்திப்புக்கு பிறகுதான் வருமான வரி வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கபடுகிறார், இப்போது பல்வேறு தரப்பு விமர்சனத்துக்கு இடையே கடும் நெருக்கடிக்கு பிறகு ஜெயலலிதா விடுவிக்கபடுகிறார் ஜெயலலிதா, பாஜகவினர் அவசர அவசரமாக வாழ்த்துக்கிறார்கள், இவை எல்லாம் அரசியல் அரங்கில் மிக பெரிய கேள்விகளை உருவாக்கியிக்கின்றன.....

"மக்களிடம் ஜெயலலிதாக்கு மக்களிடம் ஆதரவு இல்லை"
விகடன் : "ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவாக இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறதே."..?
மருத்துவர்.அய்யா: "மக்களிடம் ஜெயலலிதாக்கு மக்களிடம் ஆதரவு இல்லை, சில ஊடகங்களும், அதிகாரிகளும்,உளவுதுறையும் இணைந்து உருவாக்கும் பொய்யான தோற்றம். அது முதன்முதலாக முதல்வராகி, வளர்ப்பு மகன் திருமணத்தை ஜெயலலிதாவும், சசிகலாவும் நடத்திய ஊழல் ஆட்சிக்காக ஜெயலலிதாவை மக்கள் தண்டித்தார்கள், அதுபோல இன்னும் இரண்டே மாதங்களில் எல்லாம் தலைகிழாக மாறும். இப்போது நடந்துகொண்டிருக்கும் ஊழல்க்காகவும், செய்த தவறுக்காகவும் மக்கள் தண்டிப்பார்கள்...
"கலைஞர் அவர்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்"
விகடன்: "நீதிபதி.குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையிடு செய்ய, ஏன் இவ்வளவு தயக்கம் ..? தாமதம்..?
மருத்துவர்.அய்யா : " இது தொடர்பாக நாங்கள் கர்நாடக அரசுக்கும், வழக்குரைஞர்.ஆச்சாராவுக்கு, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்க்கும் கடிதம் எழுதினோம், சட்டரீதியான இந்த உரிமைபோராட்டம் ஒய்ந்துவிட கூடாது என்ற கவலையில் இருந்தபோது, கலைஞர் மேல்முறையீடு செய்யபோவதாக அறிவித்து இருக்கிறார், அவரது அறிவுப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது, அவருக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும் ....
" ரஜினிகாந்த்க்கு அச்சுறத்தல்"
விகடன் : "ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த், இளையராஜா போன்றோர் கலந்துகொண்டது பற்றி உங்கள் கருத்து "..?
மருத்துவர்.அய்யா : "கடந்த திமுக ஆட்சியில் ஒரு விழா நடந்தபோது அதில் கலந்துகொண்ட அஜித் "இந்த மாதிரி விழாக்களுக்கு வர வேண்டும் என நிபந்தனை செய்ய கூடாது " என அந்த விழா மேடையிலே பகிரங்கமாக குற்றம் சுமத்தினார், கலைஞரை மேடையில் வைத்துகொண்டே அஜித் இதை சொன்னார், கலைஞர் அருகே இருந்த ரஜினிகாந்த எழுந்து நின்று கைதட்டி அஜீத்யின் பேச்சுக்கு வரவேற்ப்பு செய்தார், அதே ரஜினி இன்று ஜெயலலிதா பதவியேற்ப்பு விழாக்கு செல்கிறார் என்றால் அவர்க்கு என்ன அச்சுறுத்தல் இருந்து இருக்குமோ, தங்களுக்கு வேண்டாதவர்களை பழிவாங்கும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலை திரைத்துறையினருக்கு இருக்கிறது , இதை விட பெரிய காரணம் என்ன இருக்க முடியும் ..?
"பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படுவது நாங்கள் மட்டும்தான்"
விகடன் : " ஒரு எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த்யின் செயல்பாடு எப்படி உள்ளன"..?
மருத்துவர்,அய்யா : தமிழகத்தில் எதிர்கட்சி ஒன்று இருப்பதாக மக்களும் கருதவில்லை, நாங்களும் கருதவில்லை, அவரது நடவடிக்கையை மக்கள் பார்த்துகொண்டு இருகிறார்கள். இதில் நான் என்ன இருக்கு சொல்வதற்கு ..? பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படுவது நாங்கள் மட்டும்தான், ஆளும்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிகாட்டுவது மட்டும் அல்லமால், அதற்க்கான பரிகாரங்களையும் சொல்கிறோம் ...
"தேமுதிகவை ஒரு கட்சியாகவோ, அதன் தலைவர் விஜயகாந்த்யை ஒரு தலைவர்கவோ கூட நாங்கள் கருதவில்லை"
விகடன் : "சமிபத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களோடும் பிரதமரை சந்திக்க சென்றபோது உங்களுக்கு பல முறை அழைப்பு விடுத்தும் , நீங்கள் அந்த அழைப்பை நிராகரித்து, அந்த பயணத்தையே புறகணித்தீர் ஏன் ..?
மருத்துவர்.அய்யா : "தேமுதிகவை ஒரு கட்சியாகவோ, அதன் தலைவர் விஜயகாந்த்யை ஒரு தலைவர்கவோ கூட நாங்கள் கருதவில்லை, அந்த கட்சிக்னே என்ன செயல் திட்டம் உள்ளது .?என்ன கொள்கை உள்ளது ..?
பாஜக வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது நாங்கள் வைத்து முதல் நிபந்தனை தேமுதிக கூட்டணியில் வர கூடாது என்பதுதான் அனால் அவர்கள் அதை கேக்க வில்லை, இதனால் தான் அந்த கூட்டணியில் வேண்டவெறுப்பாகதான் அந்த கூட்டணியில் இருந்தோம், இது போன்ற நிலையில் விஜயகாந்த் தலைமையில் சென்று எங்கள் தரத்தை நாங்களே குறைத்து கொள்ள விரும்பாததால், நாங்கள் ஒதுங்கி கொண்டோம் .. அதில் என்ன தவறு இருக்"ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நழுவுகிறார்"

விகடன் : " முக.ஸ்டாலின்- அன்புமணிக்கும் இடையில் நடந்த அறிக்கை போரை கவனித்தீர்களா..?"
மருத்துவர்.அய்யா : "ஆமாம். அது அனைத்தையும் படித்தேன் அன்புமணி எழுப்பிய 20 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை, வேறு எதை எதையோ பேசுகிறார் தவிர, அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமால் ஸ்டாலின் நழுவுகிறார்கிறது.?
"கலைஞர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா ..?"
விகடன் : "திமுக-தரப்பில் தாமரைசெல்வன் கேட்ட கேள்விக்கு கூட அன்புமணி பதில் சொல்லவில்லையே ..?
மருத்துவர்.அய்யா : "தாமரைசெல்வனை திமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கட்டும் , எங்களின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி இராமதாசு பதில் சொல்வார். தாமரைசெல்வனை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது இருக்கட்டும். கலைஞர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா ..? அதற்க்கு கலைஞரே ஒப்புகொள்ள மாட்டார், அவரே இன்னும் முதல்வர் கனவில் தான் உள்ளார். ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இல்லைதா போதிலும், முன்னால் துணை முதல்வர் தளபதி என்ற அடிப்படையில் அவரோடு வாதிக்க விரும்புகிறோம் , அனால் தாமரைசெல்வன் என்ற அம்பை எங்கள் மீது எய்கிறார்கள் திமுகவினர்..
"திருமாவுக்கு அறிவுரை அல்ல, ஆலோசனை"
விகடன் : "பாமக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது என்கிறார் திருமா . வட மாவட்டங்களில் இரு சமூகங்களின் நலன் கருதி மூத்த தலைவரான நீங்கள், திருமாவுடன் சுமுக உறவுக்கு வித்திடலாமே..?
மருத்துவர்.அய்யா : "தென் மாவட்டங்களில் சாதி கலவரம் ஏற்பட்டபோது நான் தலையிட்டு, இரு தரப்புக்கும் சமதானம் செய்து வைத்தேன். தலித்து மக்களுக்கு நான் செய்த பணிகளை பாராட்டி அவரே எனக்கு அம்பேத்கர் விருது கொடுத்தார்தான், ஆனாலும் தர்மபுரி சம்பவத்தின் போது அதில் கடுகளவுக்கு கூட எனக்கோ எங்கள் கட்சிக்கோ தொடர்பு இல்லை என, அப்போது லண்டனில் இருந்த திருமாவிடமே அலைபேசியில் கூறினேன். ஆனாலும் அன்னை அவத்தூறு பேசி சூழ்நிலையை கெடுத்தார்கள், இவர்கள் செய்த கட்டபஞ்சத்தால்தான் அந்த தற்கொலை நடந்தது.
அதை கொலை என மாற்றினார்கள் அனால், மரக்கானத்தில் எங்கள் இளைஞர்களை இருவரை கொலை செய்து, அதை தற்கொலை என்று சொன்னார்கள். என்ன செய்வது.? அரசும், அதிகாரமும் அவர்களின் பக்கம் இருந்ததால் நானும், என் கட்சியினரும் சிறை சென்றோம்.

இனி சமூக நல்லிணத்துக்குக்கா, இவர்களோடு எப்போதும் இணைய முடியாது, அரசியலில் திருமா செய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே, இதை அவர் அறிவுரையாக அல்லாமல், ஆலோசனையாக மட்டும் எடுத்து கொள்ளலாம், அவர் எந்த பிரிவு தலித்து தலைவராக தன்னை முன்னிருத்து கொள்கிறாரோ, அந்த மக்களின் வாக்கு வங்கியை நம்பி அவர் எங்களை போல தனித்து நின்று தேர்தலை சந்திக்கட்டும் , இதை அவர் செய்வார் என நான் நம்புகிறேன் ....
@@முற்றுபெற்றது
Wednesday, 27 May 2015
தினத்தந்தியின் விஷம பிரச்சாரம்
தினத்தந்தியின் விஷம பிரச்சாரம்
தந்தி டிவியில் "தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடாத எம்பி-க்கள்" என்ற பட்டியலில் மருத்துவர்.அன்புமணி என்ற தலைப்புடன் விஷம செய்தியை வெளியிட்டு வரும் தந்தி தொலைகட்சிக்கான பதில் இதோ
"தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேப்பாட்டு நிதி 2014-2015"
தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்த பணிகள் விவரம்:-
நிர்வாக அனுமதி பெற்ற பணிகளின் எண்ணிக்கை 229. இதன் மொத்த மதிப்பீடு ₹396.834 லட்சம்.
ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட திட்ட இயக்குனரால் நிர்வாக அனுமதி வழங்க வேண்டிய பணிகளின் எண்ணிக்கை 67. அதன் மொத்த மதிப்பீடு ₹93.166 லட்சம்.
மொத்த பணிகளின் எண்ணிக்கை 296. மொத்த மதிப்பீடு ₹490.000 லட்சம்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடி ரூபாயில், 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு பணிகளை ஒதுக்கீடு செய்திருக்கிறார்.
உண்மை நிலை இப்படியிருக்க, தந்தி டிவியில் "தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடாத எம்பி-க்கள்" என்ற பட்டியலில் மருத்துவர் .அன்புமணி இராமதாசு அவர்களின் பெயரை வெளியிட்டு வருகிறது. இச்செய்தி உண்மைக்கு புறம்பான ஊடக விசமப் பிரச்சாரம் ஆகும்.
மருத்துவர்.அன்புமணி அறிக்கை மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க வேண்டும்
மருத்துவர்.அன்புமணி அறிக்கை
மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க வேண்டும்
மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க வேண்டும்
"மாணவர்களுக்கு நிபந்தனையின்றி
கல்விக் கடன் வழங்க வேண்டும்!"
கல்விக் கடன் வழங்க வேண்டும்!"
தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையும் அடுத்த சில வாரங்களில் தொடங்கிவிடும். பணம் படைத்த மாணவர்களின் கல்லூரிக் கல்வி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பொருளாதாரக் காரணங்களால் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
பட்டப் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதால் தான் கல்விக் கடன் வழங்கும் திட்டம் கடந்த 2000&01 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புக்கள் தொட்டுவிடும் தொலைவில் இருந்தாலும், அதற்குத் தேவையான கல்விக் கடன் மட்டும் தொடுவானமாகவே தெரிகிறது. எத்தனை வங்கிகளை அணுகி, எத்தனை விண்ணப்பங்கள் கொடுத்தாலும் கல்விக் கடன் மட்டும் கைகூட மறுக்கிறது. இதற்கு காரணம் கல்விக் கடன் வழங்க பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் விதிக்கும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விதிமுறைகள் தான்.
2015&16 ஆம் ஆண்டில் கல்விக் கடன் வழங்க இன்னும் கடுமையான விதிமுறைகளை இந்திய வங்கியாளர் சங்கம் வகுத்திருக்கிறது. கல்விக்கடன் வழங்குவது குறித்து விவாதிக்க அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற பல்துறை அதிகாரிகள் கூட்டத்தில், ‘ஏ’ தரச்சான்று பெற்ற 1100 கல்லூரிகளின் பட்டியலை நிதித்துறை அதிகாரிகளிடம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தினர் வழங்கினர். அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு இருக்கும் என்பதால் அவர்களுக்கு மட்டும் கல்விக்கடன் வழங்கினால் போதுமானது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டாம் வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
‘ஏ’ தரச்சான்று பெற்ற கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து விடும் என்பது தான் அவர்களுக்கு வாங்கிகள் போட்டிப்போட்டுக் கொண்டு கடன் தருவதற்குக் காரணமாகும். அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்களாக இருப்பர் என்ற எண்ணத்தில் தான் அவர்களுக்கு கல்விக்கடன் தரப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இவை தவறான அனுமானங்களின் அடிப்படையிலான தவறான அணுகுமுறை ஆகும். பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரைகள் மீது பணம் கட்ட இது சூதாட்டமல்ல... ஏழை மாணவர்களின் வாழ்க்கை என்பதை வங்கி அதிகாரிகள் உணர வேண்டும். ஓரளவே மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்கள் வேலை கிடைக்க சிறிதளவாவது வாய்ப்புள்ள படிப்பில் சேர வேண்டுமானால் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தான் ஒரே வழியாகும்.

தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கட்டி படிக்க வருகிறார்கள் என்பதற்காக இவர்களை பணக்கார மாணவர்கள் என்று கருதக் கூடாது. இவர்களில் பலர் குடியிருக்கும் வீட்டையும், வாழ்வாதாரம் அளிக்கும் நிலங்களையும் விற்று நன்கொடை செலுத்தியவர்கள் என்பதையும், அதற்குப்பிறகு கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் தான் கல்விக்கடன் கேட்டு வங்கிகளை அணுகுகிறார்கள் என்பதையும் அதிகாரிகள் உணர வேண்டும்.
இந்தியாவில் இதுவரை ரூ.61,176 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 26.8%, அதாவது ரூ.16,380 கோடி கடனுடன் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 9,56,100 ஆகும். மேலோட்டமாக பார்க்கும்போது இது வியப்பாக இருந்தாலும், இந்த கடனின் அளவு மிகவும் குறைவானதாகும். தமிழகத்தில் 517 பொறியியல் கல்லூரிகளும், 1150 கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர்கின்றனர். கல்விக் கடன் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் 1.20 கோடி பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 9.56 லட்சம் பேருக்கு, அதாவது 7.96 விழுக்காட்டினருக்கு மட்டுமே பொதுத்துறை வங்கிகள் கல்விக் கடன் வழங்கியுள்ளன. இது பற்றாக்குறையிலும் பற்றாக்குறையாகும்.
மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டுள்ள போதிலும், அதை வங்கி நிர்வாகங்கள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.
மாணவச் செல்வங்கள் தான் இந்தியாவின் சொத்துக்கள் ஆவர். இவர்களின் கல்விக்காக வழங்கப் படும் கடன் இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்யப்படும் முதலீடாகும். இதில் தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வரை பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.2,60,531 கோடி ஆகும். இதில் பெரும்பாலானவை பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டவை. இதற்குப் பிறகும் பெரு நிறுவனங்களுக்கு தடைபின்றி கடன் வழங்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு சில லட்சங்களை கடனாக வழங்க வங்கிகள் தயங்குவது நீதியல்ல. எனவே, நடப்பாண்டில், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)