Wednesday, 16 September 2015

உட்கட்டமைப்பு வசதிகள் சர்வதேசயளவில் உயர்த்தப்படும்

உட்கட்டமைப்பு வசதிகள் சர்வதேசயளவில் உயர்த்தப்படும் 

 பதினொன்று உட்கட்டமைப்பு வசதிகள்:

 *அனைத்து மாவட்ட சாலைகளும் இருவழிப் பாதைகளாக்கப்படும்; அனைத்து மாநில நெடுஞ்சாலைகளும் நான்குவழி பாதைகளாக மாற்றப்படும்.
*அனைத்து மாவட்டத் தலைநகரங்களும் சென்னையுடன் தேசிய நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
*சென்னை & கன்னியாகுமரி இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை ஆறுவழிப் பாதையாக மாற்றப்படும்.
*சாலைகளை அமைப்பவர்களே அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவற்றை பராமரிக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக சேர்க்கப்படும்.
*குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்; வேலூருக்கு விமான சேவை தொடங்கப்படும்.
*கட்டமைப்பு தேவைகளை முன்கூட்டியே கணக்கிட்டு நிறைவேற்ற வசதியாக தமிழ்நாடு கட்டமைப்பு ஆணையம் அமைக்கப்படும்.

No comments:

Post a Comment