Friday, 29 May 2015

ஆனந்த விகடன்-க்கு  மருத்துவர்.அய்யா   அளித்த வெள்ளந்தி நேர்காணல்......

ஆனந்த விகடன்-க்கு  மருத்துவர்.அய்யா   அளித்த வெள்ளந்தி நேர்காணல்......

விகடன் : பாமக தலைமையை ஏற்றுகொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி என்கீறீர்கள். உங்கள் தலைமையை ஏற்றுகொள்ள எந்த கட்சி முன் வந்துள்ளது...?
மருத்துவர்.அய்யா : சில கட்சிகளிடம் இருந்து சமிங்கைகள் வந்துருகின்றன , ஆனால் அவை எந்த காட்சிகள் என்று தற்போது சொல்ல இயலாது ,
தமிழகத்தில் மிக பெரிய அரசியல் வெற்றிடம் உள்ளது . 50 ஆண்டு கால கழகங்களின் ஆட்சில் தமிழகம் சீரழிந்துவிட்டது என்ற சிந்தனை அனைத்து மட்டங்களிலும் பரவி , அரசியல் ரீதியாக மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள், அந்த மாற்று, நாங்கள்தான் அறிவித்து இருக்கிறோம் , இந்த ஆண்டு இறுதியில் ஊழலை எதிர்ப்பவர்கள் எங்கள் தலைமையில் வருவார்கள் ...

தேமுதிக, திமுக இரண்டுமே மக்களால் புறக்கண்ணிக்கப்பட்ட கட்சிகள்..!!!
விகடன் : திமுக-வும், தேமுதிக-வும் சட்டமன்ற தேர்தல் அரங்கில் நெருங்கி வருவதுபோல தெரிகிறது, அப்படி ஒரு கூட்டணிஅமைந்தால், வட மாவட்டங்களில் பாமக அதை எப்படி எதிர்கொள்ளும் ..?
மருத்துவர்.அய்யா : தேமுதிக, திமுக இரண்டுமே மக்களால் புரகண்ணிக்கப்பட்ட கட்சிகள், பாரம்பாரிய மிக்க திமுக-வால்ஒரு நாடாளமன்ற தொகுதியை கூட வெல்ல முடிய வில்லை , அனால் நாங்கள் எங்கள் சொந்த பலத்தில் வென்று இருக்கிறோம் .
நாங்கள்தான் இங்கே மக்களுக்கு மாற்று, நாங்களே வெல்வோம்...!!!!!

கண்ணியமான வளர்ச்சி அரசியலை முன்வைக்கிறோம்
விகடன் : பாமக அனைத்து தரப்பினரோடும் மோதல் போக்கை கடைபிடிப்பதால், அரசியல் அரங்கில் நீங்கள் தனித்துவிடப்படும் அறிகுறி தென்படுகிறதே...?
மருத்துவர்.அய்யா : "நாங்கள் தனித்துவத்வோடு அரசியல் செய்கிறோம், கண்ணியமான வளர்ச்சி அரசியலை முன்வைக்கிறோம், நாங்கள் தனித்துவிட படுகிறோம் என்றே பேச்சுக்கே இடம் இல்லை , எங்களை தனிமைப்படுத்த நினைப்பவர்கள் எங்களை போல தனித்து போட்டியிடட்டும். அப்போது தெரியும் 
யார்..? மக்களோடு இருக்கிறார்கள் என்று .."

"அதிமுக, திமுக இரண்டுமே பொது எதிரிகள்தான் "
விகடன் : "கூட்டணி அரசியலையே விரும்புகிறது திமுக உங்களின் பொது எதிரியான ஜெயலலிதாவை விழ்த்த, நீங்கள் ஏன் திமுக-வோடு கூட்டணி சேரக்கூடாது..?"
மருத்துவர்:அய்யா : "அதிமுக, திமுக இரண்டுமே பொது எதிரிகள்தான் ,கடந்த பல ஆண்டுகளாக இதை நான் சொல்லி வருகிறேன். அதிமுக, திமுக இரு கட்சிகளையும் அப்புறபடுத்த வேண்டும் என்றுதான் அன்புமணி இராமதாஸ்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறோம், எங்கள் நிலைப்பாடு அப்படி இருக்க, நாங்கள் எப்படி அவர்களுடன் கூட்டணி சேர முடியும் ..?"


"ஜெயலலிதாவே வென்றதாக அறிவித்துவிட்டு போகலாம்"
விகடன் : "ஜெயலலிதா போட்டியிட இருக்கும் இடைதேர்தலில், பாமக ஏன் ஒரு வேட்பாளரை நிறுத்த கூடாது ..?
மருத்துவர்.அய்யா: "இடைதேர்தல் வேண்டாம் என்பதே தான் என் நிலைபாடு", ஏனென்றால், ஏற்கெனவே இரு பார்முலாக்கள் உள்ளன , திமுகவுக்கு திருமங்கலம், அதிமுகவுக்கு திருவரங்கம்.5000 தொடங்கி 6000 வரை இந்த தேர்தலில் ஓட்டுக்கு விலை நிர்ணயித்தனர், ஜெயலலிதா போட்டியிடும் தொகுதில் 7000 முதல் 8000 ருபாய் வரை வாக்குகளுக்கு கூடுதலாக விலை நிர்ணயிப்பார்கள், ஆகவே எந்த கட்சிகளும் இடைதேர்தலில் போட்டியிட வேண்டியது இல்லை, ஜெயலலிதாவே வென்றதாக அறிவித்துவிட்டு போகலாம்....


"அரசியல் பருவநிலைக்கு ஏற்ப பாஜக தன் நிலையை மாற்றிகொள்கிறது"
விகடன் : " சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாக்கு , மோடி வாழ்த்து சொல்கிறார்; தமிழக பாஜகவினர் பதவியேற்ப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள், வரவிற்கும் சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதாக்கு எதிராக வேட்ப்பாளரை நிறுத்த போவதாக தமிழக பாஜக சொல்கிறது ..!!! இது நாகரிக அரசியலா..? நாடகமா ?"
மருத்துவர்.அய்யா : "இதை எப்படி ஆரோக்கியமான அரசியல் என்று சொல்ல முடியும் ...? அரசியல் பருவநிலைக்கு ஏற்ப பாஜக தன் நிலையை மாற்றிகொள்கிறது, இவ்வளவு பெரிய வழக்கில் ஜெயலலிதா விடுதலையானது ஒரு பக்கம் இருக்கட்டும்,
கடந்த நான்கு ஆண்டு அதிமுக அரசியின் ஊழல்கள் சொல்லி மாளாது, நாங்கள் ஆளுநரிடம் 216 பக்க அறிக்கை கொடுத்தோம், பொதுப்பணிதுறை அதிகாரிகளின் ஊழல் பட்டியலை சிலர் வெளியிடுகிறார்கள், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என ஊழலில் ஊறி திளைக்கும் அதிமுக அரசை, பாஜக பாராட்டுவது அரசியல் நாகரிகம் அல்ல.அதுபோல நீதிபதி.குன்ஹாவின் தீர்ப்பில் குற்றவாளியாகி, சிறைக்கு சென்ற ஜெயலலிதா , ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவை, மத்திய அமைச்சர். அருண் ஜெட்லி சந்திக்கிறார், இந்த சந்திப்புக்கு பிறகுதான் வருமான வரி வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கபடுகிறார், இப்போது பல்வேறு தரப்பு விமர்சனத்துக்கு இடையே கடும் நெருக்கடிக்கு பிறகு ஜெயலலிதா விடுவிக்கபடுகிறார் ஜெயலலிதா, பாஜகவினர் அவசர அவசரமாக வாழ்த்துக்கிறார்கள், இவை எல்லாம் அரசியல் அரங்கில் மிக பெரிய கேள்விகளை உருவாக்கியிக்கின்றன.....

"மக்களிடம் ஜெயலலிதாக்கு மக்களிடம் ஆதரவு இல்லை"
விகடன் : "ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவாக இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறதே."..?
மருத்துவர்.அய்யா: "மக்களிடம் ஜெயலலிதாக்கு மக்களிடம் ஆதரவு இல்லை, சில ஊடகங்களும், அதிகாரிகளும்,உளவுதுறையும் இணைந்து உருவாக்கும் பொய்யான தோற்றம். அது முதன்முதலாக முதல்வராகி, வளர்ப்பு மகன் திருமணத்தை ஜெயலலிதாவும், சசிகலாவும் நடத்திய ஊழல் ஆட்சிக்காக ஜெயலலிதாவை மக்கள் தண்டித்தார்கள், அதுபோல இன்னும் இரண்டே மாதங்களில் எல்லாம் தலைகிழாக மாறும். இப்போது நடந்துகொண்டிருக்கும் ஊழல்க்காகவும், செய்த தவறுக்காகவும் மக்கள் தண்டிப்பார்கள்...


"கலைஞர் அவர்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்"
விகடன்: "நீதிபதி.குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையிடு செய்ய, ஏன் இவ்வளவு தயக்கம் ..? தாமதம்..?
மருத்துவர்.அய்யா : " இது தொடர்பாக நாங்கள் கர்நாடக அரசுக்கும், வழக்குரைஞர்.ஆச்சாராவுக்கு, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்க்கும் கடிதம் எழுதினோம், சட்டரீதியான இந்த உரிமைபோராட்டம் ஒய்ந்துவிட கூடாது என்ற கவலையில் இருந்தபோது, கலைஞர் மேல்முறையீடு செய்யபோவதாக அறிவித்து இருக்கிறார், அவரது அறிவுப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது, அவருக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும் ....


" ரஜினிகாந்த்க்கு அச்சுறத்தல்"
விகடன் : "ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த், இளையராஜா போன்றோர் கலந்துகொண்டது பற்றி உங்கள் கருத்து "..?
மருத்துவர்.அய்யா : "கடந்த திமுக ஆட்சியில் ஒரு விழா நடந்தபோது அதில் கலந்துகொண்ட அஜித் "இந்த மாதிரி விழாக்களுக்கு வர வேண்டும் என நிபந்தனை செய்ய கூடாது " என அந்த விழா மேடையிலே பகிரங்கமாக குற்றம் சுமத்தினார், கலைஞரை மேடையில் வைத்துகொண்டே அஜித் இதை சொன்னார், கலைஞர் அருகே இருந்த ரஜினிகாந்த எழுந்து நின்று கைதட்டி அஜீத்யின் பேச்சுக்கு வரவேற்ப்பு செய்தார், அதே ரஜினி இன்று ஜெயலலிதா பதவியேற்ப்பு விழாக்கு செல்கிறார் என்றால் அவர்க்கு என்ன அச்சுறுத்தல் இருந்து இருக்குமோ, தங்களுக்கு வேண்டாதவர்களை பழிவாங்கும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலை திரைத்துறையினருக்கு இருக்கிறது , இதை விட பெரிய காரணம் என்ன இருக்க முடியும் ..?


"பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படுவது நாங்கள் மட்டும்தான்"
விகடன் : " ஒரு எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த்யின் செயல்பாடு எப்படி உள்ளன"..?
மருத்துவர்,அய்யா : தமிழகத்தில் எதிர்கட்சி ஒன்று இருப்பதாக மக்களும் கருதவில்லை, நாங்களும் கருதவில்லை, அவரது நடவடிக்கையை மக்கள் பார்த்துகொண்டு இருகிறார்கள். இதில் நான் என்ன இருக்கு சொல்வதற்கு ..? பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படுவது நாங்கள் மட்டும்தான், ஆளும்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிகாட்டுவது மட்டும் அல்லமால், அதற்க்கான பரிகாரங்களையும் சொல்கிறோம் ...

"தேமுதிகவை ஒரு கட்சியாகவோ, அதன் தலைவர் விஜயகாந்த்யை ஒரு தலைவர்கவோ கூட நாங்கள் கருதவில்லை"
விகடன் : "சமிபத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களோடும் பிரதமரை சந்திக்க சென்றபோது உங்களுக்கு பல முறை அழைப்பு விடுத்தும் , நீங்கள் அந்த அழைப்பை நிராகரித்து, அந்த பயணத்தையே புறகணித்தீர் ஏன் ..?
மருத்துவர்.அய்யா : "தேமுதிகவை ஒரு கட்சியாகவோ, அதன் தலைவர் விஜயகாந்த்யை ஒரு தலைவர்கவோ கூட நாங்கள் கருதவில்லை, அந்த கட்சிக்னே என்ன செயல் திட்டம் உள்ளது .?என்ன கொள்கை உள்ளது ..?
பாஜக வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது நாங்கள் வைத்து முதல் நிபந்தனை தேமுதிக கூட்டணியில் வர கூடாது என்பதுதான் அனால் அவர்கள் அதை கேக்க வில்லை, இதனால் தான் அந்த கூட்டணியில் வேண்டவெறுப்பாகதான் அந்த கூட்டணியில் இருந்தோம், இது போன்ற நிலையில் விஜயகாந்த் தலைமையில் சென்று எங்கள் தரத்தை நாங்களே குறைத்து கொள்ள விரும்பாததால், நாங்கள் ஒதுங்கி கொண்டோம் .. அதில் என்ன தவறு இருக்
"ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நழுவுகிறார்"

விகடன் : " முக.ஸ்டாலின்- அன்புமணிக்கும் இடையில் நடந்த அறிக்கை போரை கவனித்தீர்களா..?"
மருத்துவர்.அய்யா : "ஆமாம். அது அனைத்தையும் படித்தேன் அன்புமணி எழுப்பிய 20 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை, வேறு எதை எதையோ பேசுகிறார் தவிர, அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமால் ஸ்டாலின் நழுவுகிறார்கிறது.?


"கலைஞர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா ..?"
விகடன் : "திமுக-தரப்பில் தாமரைசெல்வன் கேட்ட கேள்விக்கு கூட அன்புமணி பதில் சொல்லவில்லையே ..?
மருத்துவர்.அய்யா : "தாமரைசெல்வனை திமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கட்டும் , எங்களின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி இராமதாசு பதில் சொல்வார். தாமரைசெல்வனை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது இருக்கட்டும். கலைஞர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா ..? அதற்க்கு கலைஞரே ஒப்புகொள்ள மாட்டார், அவரே இன்னும் முதல்வர் கனவில் தான் உள்ளார். ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இல்லைதா போதிலும், முன்னால் துணை முதல்வர் தளபதி என்ற அடிப்படையில் அவரோடு வாதிக்க விரும்புகிறோம் , அனால் தாமரைசெல்வன் என்ற அம்பை எங்கள் மீது எய்கிறார்கள் திமுகவினர்..


"திருமாவுக்கு அறிவுரை அல்ல, ஆலோசனை"
விகடன் : "பாமக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது என்கிறார் திருமா . வட மாவட்டங்களில் இரு சமூகங்களின் நலன் கருதி மூத்த தலைவரான நீங்கள், திருமாவுடன் சுமுக உறவுக்கு வித்திடலாமே..?
மருத்துவர்.அய்யா : "தென் மாவட்டங்களில் சாதி கலவரம் ஏற்பட்டபோது நான் தலையிட்டு, இரு தரப்புக்கும் சமதானம் செய்து வைத்தேன். தலித்து மக்களுக்கு நான் செய்த பணிகளை பாராட்டி அவரே எனக்கு அம்பேத்கர் விருது கொடுத்தார்தான், ஆனாலும் தர்மபுரி சம்பவத்தின் போது அதில் கடுகளவுக்கு கூட எனக்கோ எங்கள் கட்சிக்கோ தொடர்பு இல்லை என, அப்போது லண்டனில் இருந்த திருமாவிடமே அலைபேசியில் கூறினேன். ஆனாலும் அன்னை அவத்தூறு பேசி சூழ்நிலையை கெடுத்தார்கள், இவர்கள் செய்த கட்டபஞ்சத்தால்தான் அந்த தற்கொலை நடந்தது.
அதை கொலை என மாற்றினார்கள் அனால், மரக்கானத்தில் எங்கள் இளைஞர்களை இருவரை கொலை செய்து, அதை தற்கொலை என்று சொன்னார்கள். என்ன செய்வது.? அரசும், அதிகாரமும் அவர்களின் பக்கம் இருந்ததால் நானும், என் கட்சியினரும் சிறை சென்றோம்.
இனி சமூக நல்லிணத்துக்குக்கா, இவர்களோடு எப்போதும் இணைய முடியாது, அரசியலில் திருமா செய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே, இதை அவர் அறிவுரையாக அல்லாமல், ஆலோசனையாக மட்டும் எடுத்து கொள்ளலாம், அவர் எந்த பிரிவு தலித்து தலைவராக தன்னை முன்னிருத்து கொள்கிறாரோ, அந்த மக்களின் வாக்கு வங்கியை நம்பி அவர் எங்களை போல தனித்து நின்று தேர்தலை சந்திக்கட்டும் , இதை அவர் செய்வார் என நான் நம்புகிறேன் ....
@@முற்றுபெற்றது


Wednesday, 27 May 2015

                     தினத்தந்தியின் விஷம பிரச்சாரம்

                                    தினத்தந்தியின் விஷம பிரச்சாரம்
தந்தி டிவியில் "தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடாத எம்பி-க்கள்" என்ற பட்டியலில் மருத்துவர்.அன்புமணி என்ற தலைப்புடன் விஷம செய்தியை வெளியிட்டு வரும் தந்தி தொலைகட்சிக்கான பதில் இதோ
"தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேப்பாட்டு நிதி 2014-2015"
தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்த பணிகள் விவரம்:-
நிர்வாக அனுமதி பெற்ற பணிகளின் எண்ணிக்கை 229. இதன் மொத்த மதிப்பீடு ₹396.834 லட்சம்.
ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட திட்ட இயக்குனரால் நிர்வாக அனுமதி வழங்க வேண்டிய பணிகளின் எண்ணிக்கை 67. அதன் மொத்த மதிப்பீடு ₹93.166 லட்சம்.
மொத்த பணிகளின் எண்ணிக்கை 296. மொத்த மதிப்பீடு ₹490.000 லட்சம்.
 மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடி ரூபாயில், 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு பணிகளை ஒதுக்கீடு செய்திருக்கிறார்.
உண்மை நிலை இப்படியிருக்க, தந்தி டிவியில் "தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடாத எம்பி-க்கள்" என்ற பட்டியலில் மருத்துவர் .அன்புமணி இராமதாசு அவர்களின் பெயரை வெளியிட்டு வருகிறது. இச்செய்தி உண்மைக்கு புறம்பான ஊடக விசமப் பிரச்சாரம் ஆகும்.

மருத்துவர்.அன்புமணி அறிக்கை மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க வேண்டும்

                                    மருத்துவர்.அன்புமணி அறிக்கை
மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க வேண்டும்

"மாணவர்களுக்கு நிபந்தனையின்றி
கல்விக் கடன் வழங்க வேண்டும்!"
தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையும் அடுத்த சில வாரங்களில் தொடங்கிவிடும். பணம் படைத்த மாணவர்களின் கல்லூரிக் கல்வி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பொருளாதாரக் காரணங்களால் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
பட்டப் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதால் தான் கல்விக் கடன் வழங்கும் திட்டம் கடந்த 2000&01 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புக்கள் தொட்டுவிடும் தொலைவில் இருந்தாலும், அதற்குத் தேவையான கல்விக் கடன் மட்டும் தொடுவானமாகவே தெரிகிறது. எத்தனை வங்கிகளை அணுகி, எத்தனை விண்ணப்பங்கள் கொடுத்தாலும் கல்விக் கடன் மட்டும் கைகூட மறுக்கிறது. இதற்கு காரணம் கல்விக் கடன் வழங்க பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் விதிக்கும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விதிமுறைகள் தான்.
2015&16 ஆம் ஆண்டில் கல்விக் கடன் வழங்க இன்னும் கடுமையான விதிமுறைகளை இந்திய வங்கியாளர் சங்கம் வகுத்திருக்கிறது. கல்விக்கடன் வழங்குவது குறித்து விவாதிக்க அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற பல்துறை அதிகாரிகள் கூட்டத்தில், ‘ஏ’ தரச்சான்று பெற்ற 1100 கல்லூரிகளின் பட்டியலை நிதித்துறை அதிகாரிகளிடம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தினர் வழங்கினர். அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு இருக்கும் என்பதால் அவர்களுக்கு மட்டும் கல்விக்கடன் வழங்கினால் போதுமானது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டாம் வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
‘ஏ’ தரச்சான்று பெற்ற கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து விடும் என்பது தான் அவர்களுக்கு வாங்கிகள் போட்டிப்போட்டுக் கொண்டு கடன் தருவதற்குக் காரணமாகும். அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்களாக இருப்பர் என்ற எண்ணத்தில் தான் அவர்களுக்கு கல்விக்கடன் தரப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இவை தவறான அனுமானங்களின் அடிப்படையிலான தவறான அணுகுமுறை ஆகும். பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரைகள் மீது பணம் கட்ட இது சூதாட்டமல்ல... ஏழை மாணவர்களின் வாழ்க்கை என்பதை வங்கி அதிகாரிகள் உணர வேண்டும். ஓரளவே மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்கள் வேலை கிடைக்க சிறிதளவாவது வாய்ப்புள்ள படிப்பில் சேர வேண்டுமானால் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தான் ஒரே வழியாகும்.

தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கட்டி படிக்க வருகிறார்கள் என்பதற்காக இவர்களை பணக்கார மாணவர்கள் என்று கருதக் கூடாது. இவர்களில் பலர் குடியிருக்கும் வீட்டையும், வாழ்வாதாரம் அளிக்கும் நிலங்களையும் விற்று நன்கொடை செலுத்தியவர்கள் என்பதையும், அதற்குப்பிறகு கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் தான் கல்விக்கடன் கேட்டு வங்கிகளை அணுகுகிறார்கள் என்பதையும் அதிகாரிகள் உணர வேண்டும்.
இந்தியாவில் இதுவரை ரூ.61,176 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 26.8%, அதாவது ரூ.16,380 கோடி கடனுடன் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 9,56,100 ஆகும். மேலோட்டமாக பார்க்கும்போது இது வியப்பாக இருந்தாலும், இந்த கடனின் அளவு மிகவும் குறைவானதாகும். தமிழகத்தில் 517 பொறியியல் கல்லூரிகளும், 1150 கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர்கின்றனர். கல்விக் கடன் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் 1.20 கோடி பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 9.56 லட்சம் பேருக்கு, அதாவது 7.96 விழுக்காட்டினருக்கு மட்டுமே பொதுத்துறை வங்கிகள் கல்விக் கடன் வழங்கியுள்ளன. இது பற்றாக்குறையிலும் பற்றாக்குறையாகும்.
மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டுள்ள போதிலும், அதை வங்கி நிர்வாகங்கள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.
மாணவச் செல்வங்கள் தான் இந்தியாவின் சொத்துக்கள் ஆவர். இவர்களின் கல்விக்காக வழங்கப் படும் கடன் இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்யப்படும் முதலீடாகும். இதில் தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வரை பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.2,60,531 கோடி ஆகும். இதில் பெரும்பாலானவை பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டவை. இதற்குப் பிறகும் பெரு நிறுவனங்களுக்கு தடைபின்றி கடன் வழங்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு சில லட்சங்களை கடனாக வழங்க வங்கிகள் தயங்குவது நீதியல்ல. எனவே, நடப்பாண்டில், கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.

Tuesday, 26 May 2015

பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக திரு.பாலு கலியபெருமாள்

பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக திரு.பாலு கலியபெருமாள்
வழக்கறிஞர் அவர்கள் மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் ஒப்புதலுடன் இன்று 
26/05/2015 இன்று நியமிக்கப்பட்டார்....

பாமக நிறுவனர் ச.இராமதாசு அறிக்கை

 பாமக நிறுவனர் ச.இராமதாசு அறிக்கை                          
சொத்துக்குவிப்பு வழக்கு: கர்நாடக அரசு 
வீண் ஊகங்களுக்கு இடம் தர கூடாது
வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா? என்ற வினா எழுந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்று கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மக் குமாரும், அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் அரசுக்கு பரிந்துரை அளித்திருந்தனர். அதனடிப்படையில் தான் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவிருந்தது. இந்த பரிந்துரைகள் குறித்து தலைமை வழக்கறிஞரிடம் சில விளக்கங்களைக் கேட்க வேண்டியிருந்ததாகவும், ஆனால், அரசு தலைமை வழக்கறிஞர் ஊரில் இல்லாததால் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா கூறியிருக்கிறார். இந்தக் காரணம் சரியானது அல்ல என்று கூறி நிராகரிக்க முடியாது. அதேநேரத்தில் மேல்முறையீடு குறித்து முடிவெடுக்கப்படாததால் மக்களிடையே ஐயம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.


கர்நாடக அரசின் நிலை தொடர்பாக மக்களுக்கு ஐயம் ஏற்பட்டிருப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் ஏராளமான ஓட்டைகள் இருப்பதையும், இவற்றைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கில் கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்டவர்களுக்கு கடந்த 13 ஆம் தேதி நான் கடிதம் எழுதியிருந்தேன். இவ்வழக்கு விசாரணையில் முக்கியப் பங்காற்றியவரும் சிறப்பு அரசு வழக்கறிஞருமான ஆச்சார்யாவும், தலைமை வழக்கறிஞரும் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யாவிட்டால் அது தவறான முன்னுதாரனம் ஆகிவிடும் என்று கர்நாடக அரசை எச்சரித்திருந்தனர். சட்ட வல்லுனர்களும் இதையே கூறியிருந்தனர்.

அதேநேரத்தில் கர்நாடக காங்கிரசில் உள்ள ஜெயலலிதா ஆதரவு தலைவர்கள் பலர் இவ்வழக்கில் மேல்முறையீடு கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள். இத்தகைய சூழலில் கடந்த 21 ஆம் தேதி நடைபெறவிருந்த கர்நாடக அமைச்சரவை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகும் போது மேல்முறையீடு செய்வதிலிருந்து கர்நாடகம் பின்வாங்குகிறதோ? என்ற ஐயம் ஏற்படுவதில் தவறில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நேரம் இருப்பதால், நன்றாக சிந்தித்து பொறுமையாக முடிவெடுக்கலாம் என கர்நாடக அரசு கருதியிருக்கலாம்; அவ்வாறு கருதினால் அது தவறும் இல்லை. ஆனால், மேல்முறையீடு செய்வதற்கான காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், மேல்முறையீடு செய்வது பற்றி எப்போது முடிவெடுக்கப்படும் என்பதை கர்நாடக அரசு உறுதியாக அறிவிக்காமல் இருப்பதும், முடிவெடுப்பதற்கான கூட்டங்களை அறிவித்துவிட்டு திடீரென அதை மாற்றுவதும் தான், இந்த விஷயத்தில் தேவையில்லாத யூகங்களை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தேவையில்லாத யூகங்கள் ஏற்படுவதற்கு இடம் தராமல், அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எப்போது நடக்கும்? என்பது குறித்த விவரங்களை கர்நாடக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மற்றொருபுறம், இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் கலைஞர் அறிவித்திருக்கிறார். இந்த வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கலைஞர் கூறிவந்த நிலையில், தி.மு.க.வும் மேல்முறையீட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 14 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன். இத்தகைய சூழலில், மேல்முறையீடு செய்ய தி.மு.க. முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் மேல்முறையீட்டுக்கு அதிக கால அவகாசம் இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அநீதி அதிக நாட்களுக்கு ஆட்சி செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் நீதியை உடனடியாக நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றக் கோடை விடுமுறை முடிவதற்கு முன்பாகவே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் வல்லமை பெற்ற மூத்த வழக்கறிஞரை நியமித்து இவ்வழக்கை நடத்த திமுக முன்வர வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.