Wednesday, 16 September 2015

பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவோம்


பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவோம்

 பத்தாவது பொருளாதார வளர்ச்சி

 
*பொருளாதார விஷயங்களில் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார வல்லுனர் குழு அமைக்கப்படும். *தமிழகத்தின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். *விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது வினியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். உணவு சமைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களும் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும். *தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் நியாய விலை பல்பொருள் அங்காடிகள் திறக்கப்படும். இவற்றில் அனைத்துப் பொருட்களும் அடக்க விலைக்கே விற்பனை செய்யப்படும்.
 


*சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறிய அளவில் நடத்தப்பட்டு வரும் பண்ணைப் பசுமைக் கடைகள் தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்படும்.
*பண்ணைப் பசுமைக் கடைகளுக்காக மாவட்ட அளவில் அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். இதனால் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.
*மின் உற்பத்தியை அதிகரித்து, மின்சாரக் கொள்முதலை முற்றிலுமாக கைவிடுவதன் முலம், மின் கட்டணம் குறைக்கப்படும்.
*அரசுப் பேரூந்துகளில் பயணிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் சரக்குகளை ஏற்றிச் செல்வதன் மூலம் ஒவ்வொரு பேரூந்துக்குமான சராசரி தினசரி வருவாய் ரூ.20,000 ஆக உயர்த்தப்படும். இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு கிடைக்கும் லாபத்தை பயணிகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் பேரூந்துக் கட்டணம் குறைக்கப்படும்.
*சர்க்கரை மீதான 5% மதிப்பு கூட்டு வரி ரத்து செய்யப்படும்.
*நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படும்.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் இலவசம்
*அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மிச்சமாகும். இதை அக்குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவசமாக கருதலாம்.
*தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1.08 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.
*இந்த நடவடிக்கைகளின் மூலம் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படுவதால் இனி அதிகமாக கடன் வாங்கத் தேவையிருக்காது.

No comments:

Post a Comment