Wednesday, 16 September 2015

கட்டாய கட்டணமில்லா தரமான கல்வி

பாமக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2016 வரைவுத் தேர்தல் அறிக்கையில் முதாலவது "கல்வி"

*கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆக அதிகரிக்கப்படும். அதாவது கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும்.
*மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும்.
*மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு
பள்ளித் தர இயக்குனர் நியமிக்கப்படுவார்.
*மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஆந்திரம் மாநிலப் பாடத்திட்டங்களில் உள்ள சிறந்த அம்சங்களை கண்டறிந்து அவற்றை உள்ளடக்கிய புதியக் கல்வித் திட்டம் உருவாக்கப்படும். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்படும். புதியக் கல்வித் திட்டம் 2017 ஆம் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

*தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9&ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
*- அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் கணிணி ஆசிரியர்களும், பிற சிறப்பு ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.
*தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வகை செய்யப்படும்.
*திறன் சார் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாக சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.
*பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மை குழுக்களாக மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும்.
*தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உயர்கல்வி;
*பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் திறன்சார் கல்வி கல்லூரிகளுக்கும், பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும். கல்லூரிப் படிப்பு முடிக்கும் போது வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
*ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பல்கலைக் கழகம் தொடங்கப்படும்.
*தமிழகத்தில் 6 ஒருமை பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். ஆராய்ச்சிகளை செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

*அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு சட்டக்கல்லூரியும் தொடங்கப்படும்.
*தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழிட்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
*பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும். அவற்றில் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவர்.


1 comment:

  1. மதிப்புமிகு சின்ன அய்யா அவர்களுக்கு,

    பாட்டாளி மக்கள் காட்சியின் வரைவு அறிக்கை மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.. எனக்கு தோன்றிய சில கருத்துக்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    1. விவசாயம் செழிக்க ஏரி, குளங்கள் தூர்வார படவேண்டும். நிலத்தடி நீரை அதிகரிக்க இது போன்ற நடவடிக்கை மேற்கொண்டாள் இன்னும் சிறப்பு.
    2. இயற்கை வேளாண்மை பொருட்களுக்கு சந்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் இயற்கை வேளான்மையை ஊக்குவிக்க தமிழகத்தை மண்டலங்களாக பிரித்து ஏற்றுமதி மையங்கள் உருவாக வேண்டும். இயற்கை வேளாண்மை மூலம் மட்டுமே விவசாயி தன் நிறைவு பெற முடியும். நம்மாழ்வார் போல் மருத்துவர் அய்யா அவர்களும் இயற்கை வேளான்மையின் பயன்களை மக்களுக்கு உரைத்தவர். மரபணு விதைகளை தடை செய்தவர் நீங்கள். உங்களால்தான் இன்று விவசாயம் உயிர் பெற்றது. மேலும் இதன் மூலம் உரத்திற்க்கான செலவும் மிச்சமாகும். மனிதனின் அடிப்படை சுகாதாரம் நஞ்சு இல்லா உணவே.. அதை மக்கள் பெறவேண்டும்.
    3. சென்னை நகரின் உள்கட்டமிப்பை மேம்படுத்த வேண்டும். சாலை ஓர மழை நீரை சேமிக்க அல்லது வெளியேற கால்வாய்கள் சரி செய்யப்பட வேண்டும். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து நீர் நிலைகள் காக்கப் படவேண்டும்.
    4. திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் சாய கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கப் படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படவேண்டும்.

    ஒரு சொட்டு நீரும் நஞ்சாக கூடாது...
    ஒரு அடி நிலமும் வீணாக கூடாது...

    மாற்றத்தை வேண்டி,
    பா. நீலமேக சுந்தரம்.
    காமராஜ் நகர்,
    நல்லம் பள்ளி,
    தர்மபுரி.

    ReplyDelete