Wednesday, 16 September 2015

அபரிவிதமான தொழில் வளர்ச்சி

அபரிவிதமான தொழில் வளர்ச்சி

எட்டாவது தொழில் வளர்ச்சி


*தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார்.

*புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி 3 வாரங்களில் வழங்கப்படும்.

*ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தொழில் திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவ முதலமைச்சர் அலுவலகத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

*தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தியில் 60% சென்னையிலும், 15% கோவையிலும் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் 25% மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நிலையை மாற்ற தமிழகம் முழுவதும், குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

*தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை தொடங்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
 

 


*தொழிற்சாலைகளில் பணியாற்ற சிறந்த மனித வளத்தை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழிற்கல்வி நிலையமும், ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் அமைக்கப்படும்.

*ஓசூரில் தொடங்கி கிருஷ்ணகிரி, தருமபுரி வரையுள்ள பகுதி தகவல் தொழில்நுட்பத் தாழ்வாரமாக மாற்றப்படும்.

*புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு உடனடியாக நிலம் வழங்க வசதியாக ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். இதில் ஒரு சதுர அடி கூட விளைநிலமாக இருக்காது.
 
 

No comments:

Post a Comment