Monday, 29 February 2016

அன்புமணியின் அன்பு என்ற அஸ்த்திரம்..

பாமகவை நோக்கி ....

தர்மபுரி சம்பவத்தில் பாமகவுக்கு ஏற்ப்பட்ட அநீதியை எதிர்த்து ஆயிரக்கணக்கான உறவுகள் கட்டற்ற மழையாக வந்து சேர்ந்தாரகள்😊😊😊.. அதே அளவில் சரிபாதி ஆதரவர்களும் பாமகவை விட்டு விலகினார்கள்... (ஊடகங்களின் சூழ்ச்சியால்)
😥😥😥 என்பதே எதார்த்தம்...

மரக்கணம் சம்பவத்தின்ப்போது இலட்சக்கணக்கான உறவுகள் வெள்ளம்னா பாமக என்ற கரை பக்கம் பாய்ந்தார்கள் அதே நேரத்தில் ஆயிரகணக்கான நடுநிலைவாதிகளை பாமக மீது எதிர்மறை எண்ணங்களை ஊடகங்கள் மூலம் உருவாக்கி சில லாபிகளில் வெற்றியும் அடைந்தீர்...

ஆனால்

கடந்த ஆண்டு மாற்றம்..முன்னேற்றம்.. அன்புமணி என்ற உயரிய நோக்கத்துடன் பாமக அன்புமணி என்ற அஸ்திரத்தை இறக்கி களமாடிய ஓராண்டில் இலட்சகணக்கான பாட்டாளிகளை பெற்றோம் தவிர இழக்கவில்லை..
இறுதியில் முத்தாயிப்பாக ...

அன்புமணி ஆகிய நான்...

என்ற முழக்கம் தமிழகத்தின் மூலை முடுக்கில் உள்ள இளைஞனையும் முடுக்கிவிட்டு "அன்புமணி" என்ற அரசியல்வாதியை தொண்டனாக ஏற்கமால் இலட்சகணக்கான தமிழர்களின் மனதில் அண்ணாகவும் , தம்பியாகவும், மகனாகவும் ,ரசிகனாகவும் ஏற்கும் மனநிலை உருவாக்கியதே "அன்புமணியின்" அன்புதான்...

மாற்றம் நம் அன்பாலும் ,செயலாலும் தான் வரும் என சொன்னதை செயலில் செய்து காட்டிவிட்டார் "அன்புமணி"

போராட்டத்தினால் பெறாத மாற்றத்தையும் ,வெற்றியையும் தன் அன்பால் செய்து காட்டிவிட்டார் அண்ணன்.அன்புமணி

#Anbumani4cm

மாற்றத்தை நோக்கி அன்புமணி

மாற்றம் ஒன்றே மாறுவது இல்லை

"அன்புமணி" பற்றி சாமனிய நடுநிலைவாதிகளின் கருத்து.......

அப்பா கட்சி ஆரம்பித்தபோது மகனுக்கு வயது 21. சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மாணவர் அவர். மருத்துவத்தில் பெரிய அளவில் சாதிக்கவேண்டும் என்பதுதான் அவரின் கனவு. ஆனால், நடந்தது? இன்று அந்த மகன்தான் கட்சியின் முதல்வர் வேட்பாளர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாநாட்டை இந்த அளவுக்கு டெக்னாலஜியைப் பயன்படுத்தி யாரும் நடத்தியது இல்லை. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துவிட்டார் மருத்துவ மகன், மருத்துவரின் மகன் அன்புமணி ராமதாஸ்.

திண்டிவனம் அருகே உள்ள கீழ்சிவரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ராமதாஸ். 1980களில் திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் கிளினிக் ரொம்பவும் பிரபலமானது. அந்தக் காலத்தில் ஐந்து ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரையும் கொடுத்த டாக்டர் இவர். கீழ்சிவரிக்கு அருகேயுள்ள தைலாபுரத்தில்தான் ராமதாஸ் குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய நிலம் இருந்தது. ஒருபக்கம் மருத்துவத் தொழில், இன்னொருபக்கம் விவசாயம். இதுதான் ராமதாஸின் வாழ்க்கையாக இருந்தது. தன் சாதிசார்ந்த அமைப்பான வன்னியர் சங்கத்தை அப்போதுதான் ராமதாஸ் ஆரம்பித்தார். மருத்துவமும், விவசாயமும் பார்த்த நேரம்போக, வன்னியர் சமுதாயத்துக்கான விஷயங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார். 87ம் ஆண்டு வன்னியர் சங்கம் ஒரு வாரம் நடத்திய இடஒதுக்கீட்டுக்கான போராட்டம்தான் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தப் போராட்டத்தில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த போராட்டத்துக்குப் பிறகுதான் 1989ம் ஆண்டு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலேயே வந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 1991ம் ஆண்டு மீண்டும் தேர்தல். அதிலும் தனித்துப் போட்டியிட்டு பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் ஜெயித்தார். அப்போது, பாட்டாளி மக்கள் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. அதனால், பண்ருட்டி ராமச்சந்திரனை யானைமீது உட்காரவைத்து முதல்நாள் சட்டமன்றத்துக்கு அனுப்பினார்கள். 1996 தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் கட்சியோடு மட்டுமே கூட்டணிவைத்து நான்கு இடங்களில் ஜெயித்தது.

அதன்பிறகு அதிமுக, திமுக என்று ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்துவந்தது பாமக. தனித்துதான் போட்டி என்று சொல்வதும், தேர்தல் நேரத்தில் யாருடனாவது கூட்டணி சேருவதுதான் பாமக-வின் கடந்தகால வரலாறாக இருந்துள்ளது.

நிற்க...

ராமதாஸுக்கு மூன்று வாரிசுகள். காந்திமதி, அன்புமணி, கவிதா. காந்திமதியை தனது சொந்த அக்கா மகனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அவரும் டாக்டர்தான். கவிதாவின் கணவரும் சென்னையில் மருத்துவராக இருக்கிறார். அன்புமணி மருத்துவப் படிப்பு முடித்துவிட்டு வந்ததும், ‘நீ முதல்ல உன்னோட சொந்த ஊருக்கு வைத்தியம் பாரு’ -என்று ராமதாஸ் அவரது சொந்தக் கிராமமான கீழ்சிவரியில் அவருக்கு கிளினிக் வைத்துக் கொடுத்திருக்கிறார். ‘உனக்கு அரசியல் வேண்டாம்!’ என்றுதான் அன்புமணிக்குச் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். கட்சியில் சிலர்செய்த நம்பிக்கைத் துரோகம்தான் அன்புமணியை கட்சிக்குள் கொண்டுவரக் காரணம். அரசியல் பிடிக்காமல்தான் அரசியலுக்குள் வருகிறார் அன்புமணி. பிடிக்குதோ, பிடிக்கலையோ அரசியலுக்குள் வந்துவிட்டால் எப்படி வெளியே போகமுடியும். அரசியலை முதலில் பார்க்க ஆரம்பித்தார் அன்புமணி. பிறகு, பேச ஆரம்பித்தார். இப்போது பக்காவான அரசியல்வாதியாகிவிட்டார்.

கடந்த, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டது பாமக. அன்புமணி மட்டும் தர்மபுரி தொகுதியில் ஜெயித்தார். பாமக என்றால் இனி, அன்புமணிதான், என்று மாற ஆரம்பித்தது 2014ம் ஆண்டுக்குப் பிறகுதான் அன்புமணியின் முழுமையான கட்டுப்பாட்டில் கட்சி வந்தது. இனி, யாருடனும் கூட்டணி இல்லை என்று அன்புமணி தைரியமாக அறிவித்தபோது எல்லோருமே சிரித்தார்கள். ஆனால், அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ‘அன்புமணிதான் எங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர்’ என்று ராமதாஸ் அறிவித்தார். புதிதாக யோசிக்க ஆரம்பித்தார் அன்புமணி.

மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி! என்று ஒருநாள் இரவில் தமிழகம் முழுக்க ஒட்டிய போஸ்டர்களைப் பார்த்து கிண்டலடிக்காதவர்கள் இல்லை. அதுவே, அன்புமணிக்கு பெரிய விளம்பரமாகிப்போனது. முதல்வர் வேட்பாளர் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து காய்நகர்த்த ஆரம்பித்தார் அன்புமணி. ’கடைசி நேரத்துல ஏதவாது ஒரு கட்சியோட சேர்ந்துடுவாங்க. அதுக்குள்ள எதுக்கு இந்த பில்ட் அப்..’ என்று சோசியல் மீடியாவில் திட்டாதவர்கள் இல்லை. ஆனாலும் அன்புமணி அலட்டிக்கொள்ளவில்லை.

தேர்தல் நெருங்கிவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் மாநாட்டை வண்டலூரில் நடத்தி முடித்திருக்கிறார் அன்பு. இதுவரை, எந்த ஒரு அரசியல் கட்சியும் மாநாட்டுக்கு இப்படி ஒரு டெக்னாலஜியைப் பயன்படுத்தியது இல்லை. தலைவர்களில் உட்கார்ந்தபடி சிலர் பேசுவார்கள். இன்னும்சிலர், ‘போடிய’த்தின் முன்பாக நின்று மைக்கைத் தட்டிப்பார்த்து பேசுவார்கள். வயர்லஸ் மைக்கை காதோரத்தில் மாட்டிக்கொண்டு நடந்தபடியே பேசுவதும், பேச்சுக்கான ஆதாரங்களைப் பவர் பாயிண்ட் பிரசண்டேசனில் திரையில் ஓடவிடுவதும் தமிழக அரசியலுக்கு புதுசு. ஒரு ஐ.டி. கம்பெனி நடத்திய கார்ப்பரேட் மீட்டிங்போல இருந்தது பாமக மாநாடு.

’இலவசங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரே இலவசம் கல்வி மட்டும்தான்!. மத்திய அரசுப் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரம். ஒரே பாடத்திட்டம். தமிழ்நாட்டில் மதுவே இருக்காது. எல்லோருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்குவோம்..’ என்று மாநாட்டில் அன்புமணி பேசுவதைக் கேட்க நல்லாத்தான் இருக்கிறது. அதெல்லாம் நடக்குமா, என்பது தெரியாது. ஆனாலும் செய்யவேண்டும் என்று நினைக்கும் அன்புமணியின் ஆர்வத்தைப் பாராட்டலாம்.

பாட்டாளி மக்கள் கட்சி என்றால் வன்னியர்களுக்கான கட்சி என்ற இமேஜ் இருக்கிறது. அந்த வட்டத்தில் இருந்து வெளியே வரவேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்பதையும் அன்புமணி யோசிக்கவேண்டும். தமிழக அரசியல் அரங்கில் எல்லோரையும் அன்புமணி திரும்பிப்பார்க்க வைத்திருப்பது நிஜம்தான். அதுமட்டும் போதுமா?

யோசிங்க அன்பு... யோசிங்க!

https://minnambalam.com/k/1456617652

Friday, 16 October 2015

“For Change” செயலி மீண்டும் ஆண்ட்ராய்டு

அன்புள்ள நண்பர்கள் மற்றும் நலம் விரும்பும் அனைவருக்கும் வணக்கம். கடந்த மாதம் துவக்கிய “For Change” கைபேசி செயலிக்குத் தாங்கள் அளித்த அபரிமிதமான ஆதரவிற்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி. இந்த “For Change” செயலி மீண்டும் ஆண்ட்ராய்டு கைபேசியில் தரம் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி தானாகவே பதிவேற்றம் ஆகும். இல்லையேல் மறுபடியும் தாங்களே முதலில் பதிவிறக்கம் செய்ததை நீக்கிப் பின்னர் புதிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தப் பிரத்தியோகமான “For Change” செயலி மூலமாக மக்களோடு மீண்டும் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தமிழ்நாட்டை உலகிலேயே முன்மாதிரி மாநிலமாக மாற்றும் நம் பயணத்தில் உங்கள் அனைவரோடும் இணைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. நன்றியுடன் - அன்புமணி இராமதாஸ்